Tuesday, January 22, 2013

உரிமையோடு கோபம் கொள்ளும் நட்பு




தினந்தோறும் மணிகணக்கில்
கைபேசியில் பேசி...

தினமும் சந்தித்து
போலியான புன்னகை சிந்தும்
காதலியைவிட...

வாரத்தில்
ஒருமுறை பேசி...

மாதத்தில் ஒரு
முறை சந்திக்கும்போது...

உரிமையோடு கோபம் கொள்ளும்
  உறவே நிலையானது...

காதல் இல்லா உலகில்
வாழ நினைக்கலாம்...

நட்பு இல்லா உலகில்
வாழ நினைக்காதே...

நேசித்துபார் நட்பினை
உன் வாழ்கை வசந்தமாகும்.....

காத்தான்குடி நிகழ்கால நிதர்சனங்கள்

பிரகாசமான பிரதான வீதி, இருளில் சமூக எதிர்காலம்.

நூதனம் நீக்க களம் இறங்கி நூறாய் உடைந்த இயக்கங்கள்!

இளம் சமுதாயத்தை ஆட்கொண்ட கட்டார் மோகம்!

வீதிக்கு வீதி வட்டி கடைகள்,
வீட்டுக்கு வீடு சினிமா கொட்டகைகள்.

பேதைகளிலும், போதைகளிலும் சிக்கி சீரழிந்து பாதை மாறும் பயணம்.

ஆடம்பர உணவகங்கள், அழுக்கடைந்த ஆன்மாக்கள்.

வலை வீசி,
விலை பேசி,
விற்கப்படும் ஆண்மை.

நிர்க்கதியான முதிர்கன்னிகள்.

மூர்க்கமான மார்க்க சண்டைகள்!

மரியாதை தெரியாத,
மகத்துவம் புரியாத,
வெட்கம் கெட்டு ,
புலன் உணர்ச்சிக்கு அடிமையாகும் எதிர்கால தலைமுறையினர்.

விமர்சனம் செய்ய ஆயிரம் பேர்,
விமோசனம் தேட??

களங்கத்தை
மறைப்பதும் போதும்
மறுப்பதும் போதும்,
துடைத்தெறிவோம்! முன்வாருங்கள்.

தோள் கொடுப்போம்,
துயர் துடைப்போம்,
சரித்திரம் படைப்போம்.
தியாகிகளே! தயாராகுங்கள்.

Rizana nafeek punishment


கட்டார் கனவுகள்

1987 முதல் 1995 வரை பிறந்த பெரும்பாலான எமது ஆண் சமுதாயம் தற்போது கட்டார் நாட்டில்.
மிஞ்சிய சிலரும் கட்டார் கனவில்.

அவர்களின் எதிர்கால இருப்புக்கான் திட்டமிடல்கள் உள்ளனவா எம் சமூகத்தில்??

கட்டிட நிர்மாணத்துறையில்
அத்தனை பேருக்கும் தொழில் கிடைக்குமா இந்த நாட்டில்?

அல்லது கொண்டுவரும் பணத்தை முதலிடும் அளவிற்கு நிலையான தொழில் சந்தை உள்ளதா ஊரில்?

அவர்களின் வாழ்நாள் முழுவதையும் கட்டாரில் கழிப்பதை தான் விரும்புகின்றதா எம் சமூகம்?

ஆண்கள் அற்ற குடும்பங்கள் படும் இன்னல்கள் போதும்!
சமூக தலைமைத்துவங்களே!
கட்டாரில் கஷ்டப்படும் எமது உடன்பிறப்புக்களின் எதிர்காலங்களை இப்போதே வடிவமையுங்கள்!
அவர்களும் இந்த காத்தநகர் மண்ணின் மைந்தர்களே!