ஈரானை சூழும்
போர் மேகங்கள்.
வயிறு எரிவதற்கும்
எண்ணை அற்ற எமது
மக்கள்.
உண்ண உணவற்ற
மக்கள் இங்கே இருக்க
உரிமை பற்றி பேச
மக்கள் தலைவர்கள் ஜெனீவாவில்.
உலகமே அழிந்து
போனாலும்
போனை நோண்டும்
இளைஞர்கள்.
இயல்பு வாழ்க்கையுடன்
விளையாடும்
விலை வாசிகள்.
இல்ல விளையாட்டு
போட்டிகள் நடாத்தி
மகிழும் பாடசாலைகள்.