Sunday, November 27, 2011

Death leave me

மரணத்தை மறந்தவர்கள்.
மரணமே ! எங்களை விட்டுவிடு.
நாங்கள் வாழ பிறந்தவர்கள்.
திரைப்படங்கள், பாடல்கள்
எங்களின் வேதங்கள்.
நடிகர்கள் எங்கள் முன்மாதிரிகள்.
FACEBOOK எங்களின் வணக்க வழிபாடுகள்.
வணக்கத்தில் வேதங்களும் முன்மாதிரிகளின்
வாழ்க்கை வழிமுறைகளும் ஓதப்படும்.

மரணமே ! எங்களை விட்டுவிடு.
நாங்கள் வாழ பிறந்தவர்கள்.

HANDPHONE பாவனை
எங்களின் இறைதியானம்.
INTERNET எங்களின் சுவனலோகம்.
 அந்நிய பெண்கள்
எங்கள் சுவன மாந்தர்கள்.
எவ்விதத்திலும் அனுபவிக்க
உரிமை கொண்டுள்ளோம்.

மரணமே ! எங்களை விட்டுவிடு.
நாங்கள் வாழ பிறந்தவர்கள்.

மனோஇச்சை எங்களின் இறைவன்.
காதலிப்பது எங்களின் புனிதப்போர்.
போதைப்பொருட்கள் எங்களின் இறைநேசர்கள்.
இறைவனை நெருங்க உத்தரவாதமளிக்கின்றார்கள்.

journey

ஓர் மழைக்கால இரவில்
விலாசத்துடன் வீதிகளை
தேடும் விழிகளுடன்
பேரூந்தின் ஜன்னலோர
இருக்கையில் ஓர் ஆத்மாவின்
பயணத்தை ஒத்தது
எமது உலகவாழ்க்கை.

அவதானமற்று உறக்கத்திலும்
பேரூந்தின் பாடல் மயக்கத்திலும்
தரிப்பிடத்தை தொலைப்பதே
எம்மவரின் நிலை இன்று.

விலாசமற்றவர்க்கு
வழி காட்டவேண்டிய நாம்
விலாசத்துடன் எமது
வழி தொலைக்கின்றோம்.

பேரூந்தின் தரிப்பிடம்
கடந்தால் மீண்டுவர
வழி உண்டு.
வாழ்க்கை முடிந்தால்!

eid ul alha

இப்றாகிம் நபியின்
தியாகத்திற்கு
அல்லாஹ் வழங்கிய
பரிசு ஈதுல் அழ்ஹா.

நம்மவரின் இந்நாளின்
நடத்தை பிறழ்விற்கு
அல்லாஹ் வழங்கும்
தண்டனை எதுவோ?

இப்றாகிமின் தியாகம்
தம் சொந்த குடும்பம்
நம்மவரின் தியாகம்
தம் ஐவேளை தொழுகை

இப்றாகிம் வெட்ட
முனைந்தது தம் மகனை
இவர் தாம் வெட்ட
முனைவது தம் நற்பண்பை

இப்றாகிம் மக்காவில்
கட்டியது கஃபா
நம்மவர் தியேட்டரில்
கட்டுவது ரூபா.

ஹாஜரா ஓடினார்
மலைகளின் குறுக்கே
நம்மவர் ஓடுகின்றார்
காதலி வீட்டின் குறுக்கே

இஸ்மாயிலின் காலடியில்
தண்ணீர் வந்தது
நம்மவரின் காலடியில்
காலி போத்தல் வருகின்றது.

மனோ இச்சைக்கு வழிப்படும்
நன்றிகெட்டவர்களே !
ஆலமுல் அர்வாவில் கொடுத்த
வாக்குறுதி எங்கே

islam

விக்ரகமுற்றோர்
வழி துய்ப்போர்
விலங்கினை
விஞ்சோர் என
வியம்பும் வாய்மை

பெருமை உரியர்
பிறரை தம்மிருந்து
பின்னிறுத்தும்
பாதகத்தர் என
பண்பிறுக்கும் பாடம்

கன்னியர் தமை
கரம் பற்ற கைக்கூலி
கணிக்கும் கயவரை
கையிலாகாதவர் என
கழிக்கும் கலை